Friday, June 21, 2019

முகமூடி



அது என்னை நோக்கி தான் வருகிறது!!
அது யார் உருவத்தில் தெளிவு இல்லை!
உட்கார சவுகரியம் இல்லை எனினும்
தொற்றி உக்கார்ந்து கொண்டு இருக்கிறேன்- ரோட்டோரம்
வரிசையாய் நட்டு வைக்க பட்டு இருந்த மரக்கட்டைகள் மீது!
சுற்றி நிசப்தம்! காற்றின் இரைச்சல் மட்டுமே! அப்போது
கண் அகற்றாமல் என்னை மட்டும் நோக்கிய வாறு- என்னை
நெருங்குகிறது அந்த உருவம்
மங்கலாய் தெரிந்தது தெளிவாய் தெரிய ஆரம்பிக்கிறது!
அதன் கண்களில் அவ்வளவு காதல்
இதழில் ஆள் மயக்கும் புன்னகை
நடையில் நளினம்
என்னை மறந்து அதை ரசிக்க ஆரம்பித்தேன் - சுதாரித்து
தலை திருப்பினேன்
காலடி சத்த அளவு கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்கிறது!
என்னை நெருங்குவது புரிகிறது
சத்தம் நின்று விட குழப்பத்தில்  திரும்பி பாக்கிறேன்
ஐயோ! அது என் அருகில்!
பதறி எழுந்து நின்றேன் இதயம் பதறுகிறது- அது
இன்னும் என் அருகில் நெருங்கியது
 அதன் மூச்சி என் முகத்தில் படும் அளவு அருகில்!
அதன் காதல்! இதழில் புன்னகை!
நான் உறைந்தேன்
அதன் கண்களை விடுத்தது என் கண்களை அகற்ற முடியவில்லை
அதன் இடது கை  என் தலை வரவருடி கன்னம் தடவ
அவ்வளவு ஸ்பரிசம்
என்னை அணைத்து கொண்டது
அந்த இதழில் அந்த புன்னகை
ஆ! என்ன இது!
மூளைக்கு வலி சமிக்கைகள்!
உடன் என் இடது கை முதுகு தொட குருதி
அது சொருகி இருந்த கத்தியை வெளி இழுத்தது
குருதி பீறிட்டு வெளியே
வலி தங்க முடியவில்லை
அதன் முகத்தில் அதே சிரிப்பு அதே காதல்
என்ன என்பதற்குள் வயிற்றில் மீண்டும்
நெஞ்சில் விலாவில் இடம் மாற்றி மாற்றி கத்தி உள்சென்று வெளிவந்தது
இறுதியாய் கழுத்தறுத்து வலி தாண்டி
வலி கொள்ளும் நிலை  எய்து வீழ்ந்தேன் கீழே
என் கண்கள் அதன் மீது மட்டுமே!
அது மெல்ல தான் அணிந்து இருந்த முகமூடியை கழற்றி என் மீது விட்டு எரிந்தது!
அவ்விடம் விட்டு நகர்ந்தது!
அந்த முகமூடி இன்னும் என்னை பார்த்து சிரித்து கொன்டே இருந்தது!
அவ்வளவு  நிஜமாய்!

#அஜித்