Monday, February 20, 2017

செர்ரி பழங்களின் வழியே ஒரு பயணம்

செர்ரி பழங்களின் வழியே ஒரு பயணம்
தேநீர் கோப்பைகள் என் கையில் தஞ்சம் புகும் எல்லா நேரங்களிலும் கடும் சூடாகவே இருந்திருக்கிறது  . எனக்கும் சூடு தேநீர்  கோப்பைக்கும் என்றும் ஆவது இல்லை. எனக்கு சூடான தேநீர்  பிடிப்பதும் இல்லை. சூடு தனிய பிரிட்ஜெக்குள் வைத்துவிடுவேன். இப்போதும் அப்படியே வைக்கிறேன்
சூடு தனிய காத்து கொண்டிருக்கிறேன்
சொல்லப்போனால் அந்த வெப்பத்தை என்ன நா தாங்கி கொள்ளும் பலத்தை பெறவில்லை.
சூடு, என் எதிரி. படித்திருக்கிறேன் அணு கரு இணைவு மூலம் உருவான சூரியனினுள் வெப்பம் தகதகக்குமாம் கிட்ட தட்ட 15 கோடி டிகிரி செல்சியஸ் இந்த தேநீர்  வெறும் 180 டிகிரி செல்சியஸ் சாதாரணம். கலிபோர்னியா டெத் வேலியில் 1913இல் 56.4 டிகிரி பதிவானதுதான் உலகில் அதிகமாம்.
அப்போ எரிமலை குழம்பின் சூடு .உலகின் பெரிய எரிமலை  மோனா லோயயும் சரி 10 ஏப்ரல் 1815 அதிக நெருப்பு குழம்பை கக்கிய தம்போரா எரிமலை குழம்பையும் சரி நினைக்கையில் உண்மையில் உடல் வெந்து போனது போல் தான் உணர்கிறேன். எரிமலையினாலும் விண்கற்களாலும்(விண்கற்கள் பூமிக்குள் வரும்போது தீப்பற்றி எரிந்து கொண்டு வருமாம்) அழிந்து போன டினோசர்கள் வலி கொடியது உலகை அளித்தது நெருப்பு இனியும் பூமி வெப்பமயம் ஆகியே அழியும் அதன் காரணம் நாமாய் இருப்போம்.
மறுபுறம் நெருப்பு மனித நாகரிகம் வளர காரணமாயும் இருந்திருக்கிறது. சக்கரத்துக்கு முன்பாய் மனிதன் நெருப்பை கையாள படித்தான் அதை கட்டுப்படுத்த தொடங்கினான். சிக்கி முக்கி கல்லை உராய்ந்து நெருப்பை உருவாக்கவும் செய்தேன். வளர்த்தான் உலகை ஆண்டான் என்பதே உண்மை. நெருப்பு உலகை ஆண்டது
 முரணாய் நெருப்பு அழிக்கப்பட்டதால் தான் நாம் தோன்றினோம் என்று சொல்லுகிறார்கள். வெப்பம் தணிந்தே உலகம் பிறந்தது என்ற கோட்பாடும் உண்டு(பிக் பேங்). பெரு வெடிப்புக் கோட்பாடு! கடும் வெப்பத்தோடு வெடித்து சிதறிய தீப்பிழம்புகள் மெல்ல தனித்து குளிர்ந்து திண்ணம் அடைத்து  பூமி பிறந்தது. குளிர் பூமியை உண்டாக்கியது
பிரிட்ஜ்ல் இருந்து என் தேநீர் கோப்பையை எடுக்கிறேன். பிரிட்ஜெக்குள் இருந்த குளிர் என் மேல் மெல்ல படரும் போதே ஒரு அமைதியை உணர்தேன். 16-19 நூற்றாண்டு வரை உள்ள காலத்தை விஞானிகள் சிறு பனிக்கட்டிக்காலம் என்றும் கூறுகிறார்கள் முழு பனிக்காலம் வருமா என்று தெரியவில்லை ஆனால் அண்டார்டிகாவில் இருந்து அரோரா( துருவ ஒளி) ரசிக்க வேண்டும் என்று பலநாட்கள் நினைத்து உள்ளேன். வான் வண்ண வண்ண விளக்குகளால் மின்னுமாம் அந்த வண்ணங்களில் கரைந்து போக வேண்டும் என்றும் நினைத்து உள்ளேன் குறைந்த பட்சம் ரஷ்யாவின் வேர்க்கஷாயன்ஸ்க்  மற்றும் யகுட்ஸ்க் பகுதிக்காவது செல்ல வேண்டும் அங்கே குளிரால் மக்கள் வாழ்க்கையே வித்தியாசமாய் இருக்குமாம். மேலும் என் எதிரி வெப்பத்தை அளிப்பதால் குளிர் என் நண்பனே.
கை மேல் படர்ந்து இருந்த குளிர் மறைந்திருந்தது கோப்பையோடு நடக்கிறேன். சட்டென்று கால் தடுமாற சிறுதளவு தேநீர் கிழே சிந்துகிறது. மெல்ல கோப்பையை மேஜையின் மீது வைக்கிறேன். உள்ளே இருந்த தேநீர் கடல் அலை போல் கொந்தளித்து அடங்கியது 2004இல் 230,000–280,000 மக்களை பலிகொண்ட சுனாமியை நினைவுப்படுத்தியது அந்த சலசலப்பு.
உலகில் பல நாகரிகம் வெள்ளத்தால் பிறந்ததும் அழிந்ததும் வரலாறு. சிந்து சமவெளி நாகரிகம்(ஹரப்பா) நம் தமிழர் நாகரிகம் என்று ஆதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வரும்பொழுது பெருமையாய் இருக்கிறது. நம் ஜல்லிக்கட்டு காளை பொறித்த சின்னத்தை பார்த்த பொது சிலிர்த்தது அத்தகைய நாகரிகத்தை அள்ளிசென்றதில் ஒரு காரணம் நீர். சிந்து நதி. கடலுக்குள் மூழ்கிய குமரிக்கண்டம் சென்று நீரை பிளந்து நம் தமிழர் பெருமை வெளிகொண்டுவரவேண்டும் என்று தோன்றுகிறது. அந்த தொல்காப்பியத்தின் மீதியை படிக்கவேண்டும்.
நீரால் அழிந்த நாகரிகங்கள் பல நீர் இல்லாமல் அழிய போகிறவர்கள் நாம் என்று நன்றாய் தெரியும். மூன்றாம் உலக போர் நீரால் வரும். நீரால் உலக அழிவும் வரும் அது நம்மால்.
ஆனால் உலகம் அழியும் நொடியில் நாம் நம்மை காக்க மறந்து பிறரை காக்க முயலும் கணம் இருந்தால் மட்டுமே நாம் இவ்வள்ளவு காலம் இந்த பூமியில் வாழ்ந்தது முழுமை பெரும்.
ஒரு படைப்பு, பனியில் புதைத்து வைக்க பட்ட செர்ரி பழம் இன்னும் அதன் அர்த்தம் விளங்க வில்லை எனக்கு. அதே போல் இந்த கட்டுரையின் தலைப்பு ஏன் செர்ரி பழங்களின் வழியே ஒரு பயணம் என்று புரியாமல் இருக்கலாம். புரிய முற்படும் போதே பயணம் அழகாய் இருக்கும். கையில் இருந்த ஒரு கோப்பை தேநீர் தீர்ந்து இருந்தது


Tuesday, February 14, 2017

கடவுள்களுக்கு எதற்கு கோவில்!

கடவுள்களுக்கு எதற்கு கோவில்!
ஏனெனில் 
அவன் பிறப்பால் ஒரு தலித்தாய் பிறந்தான் 
தலித்தாய் மண் உண்டான் உருண்டான் தவழ்ந்தான்
தலித்தாய் சிறுமை படுத்தப்பட்டான்
தலித்தாய் ஏறி மிதிக்கப்பட்டான்
தலித்தாய் மனம் நொறுக்க பட்டு கொல்லப்பட்டான்,
தலித்தாய் மரணித்தான்- அதிசயம்
மாண்டபின் உயர்சாதியாய் பரிணமித்தான்.
கடவுள்களுக்கு எதற்கு கோவில்
உங்களுக்கு அல்லவே கட்டப்பட வேண்டும் கோவில்
கடவுளினும் சிறந்தவர்கள் அல்லவே நீங்கள்!!!
#AJITH 

Monday, February 13, 2017

மீண்டுமாய் ஒரு காதல்

இரு இமை மூட எத்தணிககும் சமயம் உன் நினைவு 
திகைத்து எழுந்து அமர்கிறேன்
நேரம் இரவு 1.27 பெப்ரவரி 14
மீண்டும் ஒரு காதலா
எண்ணம் மறுத்து துயில முயல்கிறான்
இமை பிரித்து உள்ளே நுழைகிறாள் அவள்
மறுக்கிறேன் விழியை கசக்கி அவளை வெளியே தூக்கி ஏறிய இமை சுருக்குகிறேன் விழி உருட்டுகிரேன்
மீண்டும் ஒரு காதலா
அவளிடம் வாதிட முயல்கிறான்
பெண்னே!
நான் தோற்றவன்
நான் உன்னிலும் மூத்தவன்
நான் கனவுகள் தேடி யொடுபவன் செல்வம் அற்றவன்
நான் பொய்யன்
நான் காதலிக்க பட்டவன்
நான் காதலை கண் முன் தொலைத்தவன்
நான் பெண்ணிடம் பேச தெரியாதவன்
நான் தாழ்த்தப்பட்டவன்
அவளை விரட்ட வார்த்தைகளால் அரண் அமைக்கிறேன்
மீண்டும் ஒரு காதலா
வேண்டவே வேண்டாம்
அந்த வலி வேண்டவே வேண்டாம்
"அவளை கண்களில் இருந்து நெம்பி தள்ளிவிடு"
என் மூளை கைகளுக்கு உத்தரவு இடுகிறது
என் கைகளோ அசைவற்று
என் உத்தரவு மதியாது
அவ்விடம் அப்படியே கிடக்கிறது
"துரோகியே, அவளை தள்ளி விடு;
உன்மேல் படிந்த கரை இன்னும் அழிய வில்லை- அதற்குள்
மீண்டும் ஒரு காதலா
இமை மூட மறுத்த அந்த நொடிகளை நினைத்துப்பார்
மீண்டும் ஒரு காதலா கொடியனே
தூக்கி ஏறி அவளை"
முயல்கிறேன் என் கை அசைய மாறுகிறது
இதயம் கனக்கிறது
"இன்னும் மறுமுறையாய் நான் தோற்க விரும்பவில்லை கண்ணா தூக்கி ஏறி அவளை"
அசை அசை
கண்கள் தேம்பி கண்ணீர் வழிய
கண்ணீரோடு கரைந்து போகிறாள் நிலை இல்லாமல்
நிம்மதி பெருமூச்சு விடுகிறேன்
இதுவரை அசைவற்று இருந்த அந்த கை
இதுவரை என்னை சட்டை செய்யாத அந்த கை
நொடிகளில் அவளை பற்றி பிடிக்கிறது
தாமதியாமல் என் கண்ணீர் துடைத்து
அவளை என்னுள் திணிதே விட்டது
அவள் என்னுள் நுழைந்தே விட்டாள்
படர்ந்து என் ரத்தினுள் கலந்தே விட்டாள்
அடி பெண்னே!
மீண்டுமாய் காதல் கொன்டேன்
மூளை அவளை சிந்திக்க தொடகியேவிட்டது
அவள் கண்களை
வகிடு எடுத்து சீவிய அவளது முடி
நெற்றி மீது இருக்கும் சிறு சந்தன கோடு, கீழே கரும் பொட்டு
அவள் கரும் நிறம்
அவளது உதட்டு பிளவுகள்
முடியவில்லை உன்னை நினையாமல்
பெண்னே!
நான் உன் காதலுக்கு தகுதியானவன் அல்லன்
நான் உன் அன்பை கிரகிக்க போகிறவன் அல்லன்
நான் உன் கரம் கோர்க்க போகிறவன் அல்லன்
உணர்ந்தே இருக்கிறேன்
ஆயினும் இந்த நொடிப்பொழுதில் சொல்லுகிறேன்
பெரும் கோட்டை என்னிடம் இல்லை
பெரும் கனவு மட்டுமே உண்டு
செல்வச்செழிப்பு இப்பொழுது என்னிடம் இல்லை
செல்வம் சேர்க்கும் திறன் என்னிடம் உண்டு
பெற்றோர் தந்த அடையாளம் அன்றி வேறு இல்லை- உன்
பெற்றோரை காட்டியிலும் காட்ட அன்பு என்னிடம் உண்டு
என் உயிர் பிரியும் மட்டும் உன்னை காதலிப்பேன்
உனக்கு தகுதி ஆனவன் இல்லை எனில்
மறுத்துவிடு என்னையும்
உரைக்க படாத என் காதலையும்
#AJITH

Thursday, February 9, 2017

வாழ பழகு

வாழ பழகு
ஓடி அள்ளி கொண்ட எதையும்
மரணித்தபின் நீ கொண்டு போகப்போவதில்லை
என்பதினை உணர்ந்து
வாழ பழகு